துல்கர் சல்மான் நடிப்பில் வெற்றிகரமாக ஓடி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படம் பிரான்ஸ் நாட்டில் மீண்டும் ரிலீஸாகிறது.

ரசிகர்களிடம் வரவேற்பு

துல்கர் சமான் நடிப்பில் வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. திரையரங்குகளில் சிறப்பாக ஓடிக்கொண்டிருந்த போது, கொரோனா வைரஸ் பரவலால் இப்படம் பாதிக்கப்பட்டது. மேலும் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டதால் திரையுலகம் பெரும் பாதிப்பை சந்திள்ளது. இந்நிலையில், உலகின் பிற பகுதிகளில் கொரோனா பிரச்சனை இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால், ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படம் பிரான்ஸ் நாட்டில் மீண்டும் வெளியிடப்படுகிறது.

படத்தின் கதை

படத்தின் கதாநாயகன் துல்கர் சல்மான் ஆன்லைனில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்கி அதில் சில தில்லாலங்கடி வேலை செய்து பணம் சம்பாதிப்பார். துல்கர் சல்மானுக்கு, பியூட்டிஷியனாக வரும் ரித்து வர்மா மீது காதல் ஏற்பட்டு ப்ரொபோஸ் செய்கிறார். மீராவும் துல்கரின் காதலை ஏற்கிறார். திருட்டுத்தனம் செய்து சம்பாதித்தது போதும் கோவாவுக்கு சென்று காதலியுடன் செட்டில் ஆகிவிடலாம் என்று துல்கர் சல்மான் முடிவு செய்கிறார். இதற்கிடையே போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள கெளதம் மேனன், திருட்டுத்தனம் செய்யும் துல்கர்சல்மான் மற்றும் அவரது நண்பர் காளிஷை பிடிக்க தீர்மானிக்கிறார். கோவாவுக்கு சென்ற பிறகுதான் துல்கர் சல்மான் மற்றும் காளிஷுக்கு தாங்கள் காதலிக்கும் பெண்களின் உண்மையான முகம் தெரிய வருகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் இப்படத்தின் கதை.

சிறப்பான நடிப்பு

ரொமான்டிக் த்ரில்லர் வகையில் உருவான படங்களின் வரிசையில் இப்படம் இடம்பெற்றிருந்தாலும், அதை காட்சிப்படுத்திய விதம் இயக்குநர் தேசிங் பெரியசாமிக்கு பெருமை சேர்த்துள்ளது. சரியான அளவில் காதல், த்ரில், நகைச்சுவை ஆகியவற்றை கொடுத்துள்ளார். படத்திற்கு இசை பக்கபலமாக அமைந்துள்ளது. துல்கர் சல்மானும், ரித்து வர்மாவும் சிறப்பாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளனர். கெளதம் மேனன் நடிப்பில் அசத்தியுள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படம் குறித்து வெளியாகியுள்ள சூப்பர் தகவல் ஒன்று கோலிவுட்டையே அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அதுதான் படத்தோட பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன். உலகம் முழுவதும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் இதுவரை 15 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருக்கிறதாம். இந்த தொகை படத்தின் பட்ஜெட்டை விட பிரம்மாண்ட வசூலாக என்கின்றனர். தமிழில் இந்த படம் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த நிலையில், சுமார் 10 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டு இருந்தது. ஆனால், 9 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து இருந்த நிலையில் கொரோனா மொத்தத்தையும் கெடுத்து விட்டதாக கூறி வருகின்றனர். இந்த நிலையில் உலகின் பல பகுதிகளில் கொரோனா பிரச்சனை சற்று தனிந்துள்ள நிலையில், பிரான்ஸ் நாட்டில் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் மீண்டும் ரிலீஸ் ஆவதாக அந்த படத்தின் இயக்குனர் தேசிங் பெரியசாமி மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார். முன்னதாக, மே 27-ஆம் தேதி அன்று துபாயில் ‘கண்ணம் கண்ணும் கொள்ளையடித்தால்’ மீண்டும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பு

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் தமிழ்நாடு தொலைக்காட்சி காப்புரிமையை விஜய் டிவி வாங்கியுள்ளது. இந்தப் படம் ஒளிபரப்பாகி நல்ல டிஆர்பி கிடைத்துள்ளதாக கூறி வரும் நிலையில், அடிக்கடி இத்திரைப்படத்தை விஜய் டிவி ஒளிபரப்பி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here