கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்த இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை

பிரபல இந்தி நடிகரும் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான “தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி” திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றவருமான இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்துகொண்டார். மும்பை பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது மரணத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

படிப்படியாக உயர்ந்தவர்

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான சுஷாந்த் சிங், 2013 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான, “காய் போ சே” திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து பி.கே, ராப்தா, கேதர்நாத் உள்ளிட்ட பல திரைப்படங்களின் நடித்தார். இவர் தோனி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராக அறியப்பட்டார்.

ரசிகர்கள் அதிர்ச்சி

பாலிவுட் திரையுலகில் முன்னனி நடிகராக திகழ்ந்த 34 வயதான சுஷாந்த் சிங் ராஜ்புட், பீகார் மாநிலம் பாட்னாவில் பிறந்தவர். இவரது திடீர் மரணம் திரையுலக பிரபலங்களையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே, சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணத்திற்கு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மோடி இரங்கல்

இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், சுஷாந்த் சிங் திறமையான நடிகர். சீக்கிரம் நம்மைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார். டிவியில் இருந்து சினிமாவில் அவர் சிறப்பாக செயல்பட்டார். அவரின் வளர்ச்சி பலருக்கு உந்துதலாக இருந்தது. நினைவில் நிற்க கூடிய கதாபாத்திரங்களை அவர் விட்டுச் சென்றுள்ளார். அவரின் மரணம் அதிர்ச்சி தருகிறது. அவரின் குடும்பத்தினர், ரசிகர்களுக்கு ஆறுதல்கள். ஓம் சாந்தி. என பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here