தில்லியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இளம்பெண், மருத்துவர்கள் முறையான சிகிச்சை அளிப்பதில்லை என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தில்லியில் கடந்த மாதம் 29ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக லோக் நாயக் ஜெய்பிரகாஷ் மருத்துவமனைக்கு வந்த இளம்பென் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையின் சிறப்பு வார்டில் அனுமதி அப்பெண்ணுக்கு, மருத்துவர்கள் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மருத்துவர்களின் அலட்சியப் போக்கால் தற்போது மூச்சுத்திணறலால் அவதிப்படுவதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அப்பெண் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.