சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படங்களில் நடிக்கும் ஜோதிகாவுக்கு சம்பளம் எவ்வளவு கொடுக்கப்படுகிறது என்பதற்கு ஜோதிகா சுவாரஸ்யமான பதில் அளித்துள்ளார்.

சிறந்த நடிகை

திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் தனது செகண்ட் இன்னிங்ஸை துவங்கியிருக்கும் ஜோதிகா, தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இவர் நடிக்கும் படங்கள் பெரும்பாலும் அவரது கணவர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்டால் தயாரிக்கப்படுகிறது.

‘பொன்மகள் வந்தாள்’

சமீபத்தில் அறிமுக இயக்குநர் ஜே.ஜே. ஃப்ரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடித்து வெளிவந்த திரைப்படம் ‘பொன்மகள் வந்தாள்’. இப்படம் OTT தளத்தில் வெளியாகும் என்பதனால் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது. திரையரங்க உரிமையாளர்கள் இப்படத்தை எதிர்த்தாலும், தைரியமாக அமேசானில் வெளியிட்டு லாபம் பார்த்தார் சூர்யா. இதில் ஜோதிகாவின் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டு வந்தாலும், இயக்குநர் திரைக்கதையில் சொதப்பி விட்டார் என்ற விமர்சனங்களை பெற்றது. பொன்மகள் வந்தாள் படத்தின் மூலம் கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய் சூர்யாவுக்கு லாபம் கிடைத்துள்ளது.

ஜோதிகாவின் சம்பளம்

ஜோதிகா தற்போது சூர்யாவின் தயாரிப்பு நிறுவனத்தில் நடிப்பதால் அவருக்கு எவ்வளவு சம்பளம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பினர். அதற்கு சூர்யா, “ஜோதிகாவின் சம்பளத்தில்தான் நிறுவனமே ஓடிக்கொண்டிருக்கிறது” என்று கூறினார். ஜோதிகாவிடம் சம்பளத்தை பற்றி கேட்கையில், “சூர்யாவின் ரசிகர்கள்தான் எனக்குக் கிடைத்த சம்பளம் என்று கூறியிருக்கிறார். பெரிய நடிகர்களை போல் நடிகைகளுக்கு ரசிகர் மன்றங்கள் இல்லை. என் படங்கள் வெளிவந்தால் அதை சூர்யா ரசிகர்கள்தான் முதலில் கொண்டாடுகிறார்கள். எனக்கு கிடைக்கும் சம்பளம் அவர்கள்தான்” என்று ஜோதிகா உருக்கமாக கூறியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here