நடிகை சாயிஷா கர்ப்பமாக இருக்கிறார் என வெளியான செய்தி முற்றிலும் வதந்தியே என அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

வளரும் நடிகை

தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஓரிரு படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை சாயிஷா. தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘வனமகன்’ எனும் படத்தில் அறிமுகமானார். அதன்பின்னர் கார்த்தியுடன் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்தார். கடந்த ஆண்டு மார்ச் 10-ஆம் தேதி நடிகர் ஆர்யாவை சாயிஷா திருமணம் செய்து கொண்டார். அவர்களது திருமணத்தில் சினிமா நட்சத்திரங்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இணைந்து நடிக்கும் படம்

ஆர்யா – சாயிஷா இவர்கள் இருவரும் சேர்ந்து ‘கஜினிகாந்த்’ மற்றும் ‘காப்பான்’ ஆகிய படங்களில் நடித்துள்ளனர். தற்போது, ‘டெடி’ என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். அப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

சாயிஷா கர்ப்பம்

ஆர்யா – சாயிஷா இருவரும் தங்களது சமூக வலைத்தளங்களில் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ஆக்டிவாக இருப்பார்கள். மேலும், சாயிஷா நடனமாடி அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு தனது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார். இந்நிலையில், சாயிஷா சமீபத்தில் வெளியிட்டிருந்த ஒரு வீடியோவில் மிக மெதுவாக நடனமாடி இருந்தார். இதனை கண்ட பலர், அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறி டுவிட்டரில் அந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்தனர். இந்த செய்தி பலராலும் பகிரப்பட்டு டிரெண்ட் ஆனது.

வதந்தியே

ஆனால், சாயிஷா கர்ப்பமாக இல்லை என்றும் இது வெறும் வதந்தியே எனவும் அவரது தாயார் ஷாஹீன் தெரிவித்துள்ளார். இதன்மூலம் நடிகை சாயீஷா கர்ப்பமாக இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here