மத்திய பிரதேச மாநிலம் ஷாஜாப்பூர் பகுதியைச் சேர்ந்த 80 வயது முதியவர் உடல்நலக் குறைவு காரணமாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை அளித்த மருத்துவமனை அதற்கான தொகையை செலுத்த அறிவுறுத்திய நிலையில், அவரது குடும்பத்தினர் ரூ. 5,000 பணத்தை செலுத்தியுள்ளனர். மேலும் ரூ. 11,000 செலுத்த மருத்துவமனை நிர்வாகம் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. அவர்கள் பணம் செலுத்தாததால் முதியவரை மருத்துவர்கள் கட்டிலிலேயே கட்டிப் போட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, அதற்கு மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here