தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டதால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
சமூக வலைதளம்
நடிகர், நடிகைகள் பலர் டுவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் இருக்கின்றனர். அவற்றில் தாங்கள் நடிக்கும் படங்கள் பற்றிய விவரங்கள், அரசியல், சமூக விஷயங்கள் தொடர்பான கருத்துக்கள் போன்றவற்றை பகிர்ந்து வருகின்றனர்.
ஹேக்கர்ஸ்
டுவிட்டர், முகநூல் பக்கங்களை முடக்குவதும், அவர்கள் பெயர்களில் போலியாக கணக்குகளை உருவாக்குவதும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் குஷ்பு, ஷோபனா, அனுபமா பரமேஸ்வரன், சுவாதி உள்ளிட்ட பல நடிகைகள் இதில் சிக்கினர். அந்த வரிசையில் தற்போது பூஜா ஹெக்டேவும் சிக்கியுள்ளார்.
இன்ஸ்டாகிராம் முடக்கம்
பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் கணக்கை சிலர் முடக்கி உள்ளனர். இதையடுத்து தொழில்நுட்ப குழுவினர் உதவியுடன் சில மணிநேரத்தில் அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு மீண்டும் சரிசெய்யப்பட்டது. இதற்காக உதவிய அனைவருக்கும் பூஜா ஹெக்டே நன்றி தெரிவித்துள்ளார்.
முன்னணி நடிகை
மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள பூஜா ஹெக்டே, தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். தமிழ், தெலுங்கில் தயாராகும் பெயரிடப்படாத படமொன்றில் பிரபாஸ்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.