பா. ரஞ்சித் தயாரிக்கும் புதிய படத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு ஹீரோவாக நடிக்க உள்ளார்.

காமெடியில் கலக்கல்

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் நகைச்சுவை நடிகராக புகழ்பெற்றவர் யோகிபாபு. 100க்கும் மேற்பட்ட படங்களில் படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர், தர்மபிரபு, கூர்கா, ஜோம்பி ஆகிய படங்களில் ஹீரோவாகவும் நடித்தார்.

ஹீரோவாக ஒப்பந்தம்

இந்த நிலையில், இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க யோகிபாபு ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே இதே நிறுவனத்தின் பரியேறும் பெருமாள் படத்தில் அவர் நடித்திருந்தார். புது படத்தை இயக்குனர் ஆர்.கண்ணனின் உதவியாளர் ஷான் இயக்குகிறார்.

மாறுபட்ட கேரக்டர்?

தந்தைக்கும், மகளுக்கும் இடையே நடைபெறும் உணர்வு பூர்வமான கதைதான் படம் என்கிறார்கள். அழகான மகளை பெற்ற ஒரு அழகற்ற தந்தையின் போராட்டம்தான் கதைக்களம் என்கின்றனர். இதில் யோகி பாபு முழுக்க முழுக்க மாறுபட்ட சீரியசான கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது. மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here