கொரோனாவுக்கு எதிரான சண்டையில் உறுதியாகவும், பாதுகாப்பாகவும் இருங்கள் என்று பிரபல திரைப்பட நடிகர் ஜாக்கி சான் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது 1,06,886 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய – மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன.

ஜாக்கி சான்

இந்த நிலையில், கொரோனா வைரஸுக்கு எதிராக இந்தியா எடுக்கும் முயற்சிகளை பிரபல திரைப்பட நடிகரான ஜாக்கி சான் பாராட்டியுள்ளார். இதுதொடர்பான வீடியோவை இந்தியாவுக்கான சீனத் தூதர் சன் வீடோங் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பாதுகாப்பாக இருங்கள்

அதில், “அனைவருக்கும் வணக்கம். எனது வாழ்த்துகளையும், அன்பையும் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் அளிக்க விரும்புகிறேன். நாம் அனைவரும் இன்று கடுமையான காலத்தை எதிர்கொண்டுள்ளோம் என்று எனக்கு நன்கு தெரியும். நம்பிக்கையாக இருங்கள். உங்கள் நாட்டின் அறிவுரையைப் பின்பற்றுங்கள். உறுதியாக இருங்கள். பாதுகாப்பாக இருங்கள். சிறப்பான எதிர்காலம் அமையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று ஜாக்கி சான் தெரிவித்துள்ளார்.

சீனாவின் திட்டமா?

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவது தொடர்பாக அதிகரித்து வரும் உலகளாவிய பின்னடைவை எதிர்கொண்டுள்ள சீனா, அதன் செல்வாக்கை சரிசெய்ய இதுபோன்ற கவர்ச்சியான திட்டத்தை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here