வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடந்த மூன்று வாரங்கள் பொதுமக்கள் பார்வையில் படாததால் அவரது மரணம் பற்றிய வதந்திகள் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளன.

கிம் ஜாங் உன்

கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இருந்தே வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் காணாமல் போனார். அவர் இறந்துவிட்டதாகவும், மூளைச்சாவு அடைந்துவிட்டதாகவும் செய்திகள் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், வடகொரியாவின் உழைப்பாளர் தினத்தன்று அங்குள்ள உர தொழிற்சாலை ஒன்றின் திறப்பு விழாவில் அவர் கலந்துகொண்டார்.

மீண்டும் மாயம்

இந்த நிலையில் கிம் ஜாங் உன் மீண்டும் காணாமல் போய் இருக்கிறார். மே 1ம் தேதி வெளியே வந்த அவர், பின்னர் எங்கும் காணப்படவில்லை. மூன்று வாரமாக அவர் எங்கே இருக்கிறார் என்றும் யாருக்கும் தெரியவில்லை. அதுமட்டுமின்றி கடந்த முறை வெளியே வந்தது உண்மையில் கிம் ஜாங் உன் தானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. உண்மையிலேயே அது கிம் தானா அல்லது அவரைப் போலவே இருக்கும் வேறு ஒரு நபரா என்றும் கேள்வி எழுந்து இருக்கிறது.

மாற்றங்கள்

இந்த நிலையில் அடுத்த திருப்பமாக வடகொரியாவின் முன்னாள் அதிபர்கள் புகைப்படங்கள், சிலைகள் அடுத்தடுத்து நீக்கப்பட்டு வருவதும் அங்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு நடக்கும் மாற்றங்கள், அரசியலில் எதோ பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்பதை காட்டுவதாக கூறுகிறார்கள்.

மக்கள் அவதி

வடகொரியாவின் வடபகுதியில் அமைந்துள்ள ராசன் நகரம் மொத்தமாக முடக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்திருக்கலாம் அல்லது ராசன் நகரில் ஏதோ முக்கிய நிக்ழ்ச்சி நடக்க போவதாக அந்நகர மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

கட்டுப்பாடுகள்

இந்த மாத துவக்கத்தில் இருந்தே ராசன் நகருக்குள் வெளியாட்களை செல்ல அனுமதிப்பதில்லை எனவும், ராசன் நகர மக்கள் வெளியே செல்லவும் அதிக கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக அந்த பிராந்திய மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். ரயில் பயணிகள் மட்டுமின்றி சாலை மார்க்கமாக பயணிப்பவர்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here