ஊரடங்கால் வீட்டில் முடங்கியிருக்கும் திரைப்பிரபலங்கள் பலர் யோகா, உடற்பயிற்சி, சமையல் என தங்களுக்கு பிடித்தமான விஷயங்களை செய்து அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

மனைவி என்பவள் சமைக்கத்தானா?

அந்த வகையில், நடிகர் சிம்பு சமையல் செய்வது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. சிம்பு சமைக்கும் போது அருகில் இருக்கும் விடிவி கணேஷ், சிம்புவுக்கு வரப்போகும் மனைவி ரொம்ப கொடுத்து வைத்தவர் எனப் பாராட்டுகிறார். அதற்கு, மனைவி என்பவள் சமைக்கத்தான் வருகிறாளா? அவளை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். நான் என் மனைவியை நன்றாக பார்த்துக் கொள்வேன் என சிம்பு கூறுகிறார்.

ஆர்வமாக இருக்கிறோம்

சமூக வலைதளங்களில் இந்த வீடியோவைப் பார்த்து ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகைச் சேர்ந்தவர்களும் சிம்புவை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் நடிகை பிந்து மாதவியும் சிம்புவை பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், நல்ல எண்ணம் சிம்பு, உங்கள் மனைவியை பார்க்க நாங்களும் ஆர்வமாக இருக்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here