எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண்மணி ஜூன்கோ டபெய்

ஜப்பானில் பிறந்த ஜூன்கோ டாபி 10-வயதாக இருக்கும் போதே மலையேறும் பயிற்சியில் சேர்ந்தார். ஜப்பானில் உள்ள நாசுமலை சிகரத்தில் ஏறுவதற்கு பயிற்சி பெற்றார். டோக்கியோ அருகில் உள்ள ஷோவா பெண்கள் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கிய பட்டம் பெற்றார்.

படிக்கும்போதே மலையேறும் கிளப் ஒன்றில் உறுப்பினராக சேர்ந்தார். 1969-ம் ஆண்டில் பெண்கள் மலையேறும் கிளப் தொடங்கினார். இதற்கு ஜப்பான் பெண்கள் மலையேறும் கிளப் என்று பெயரிட்டார்.

திருமணத்துக்கு பின்னர் கணவருடன் இணைந்து பல சிகரங்களில் மலையேறும் பயிற்சிகளை மேற்கொண்டார். ஜப்பானில் உள்ள புஜி மலை உள்ளிட்ட சில உயரமான சிகரங்களில் ஏறி பயிற்சி பெற்றார். சுவிஸ் ஆல்ப் மலை சிகரங்களில் உள்ள மாட்டர்ஹார்னிலும் மலையேறும் பயிற்சி பெற்றார். பல பயிற்சிகளின் காரணமாக 1972-ம் ஆண்டு ஜப்பானின் மிகச்சிறந்த மலையேறும் பெண் பயிற்சியாளர் என்ற பெயரை பெற்றார்.

இதையடுத்து ஜப்பானில் இருந்து வெளிவரும் யோமியுரி நாளிதழ் மற்றும் நிகான் தொலைக்காட்சி ஆகியவை இணைந்து ஜப்பானில் உள்ள பெண்கள் மலையேறும் குழுவை எவரெஸ்ட் சிகரத்துக்கு அனுப்ப முடிவு செய்தன. ஜூன்கோ டாபி உட்பட 15 பெண்களை தேர்வு செய்தனர். இதற்காக அவர்களுக்கு கடுமையான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 1975-ம் ஆண்டின் தொடக்கத்தில் காத்மாண்டுவுக்கு அனுப்பப்பட்டனர். அங்கு உள்ளூரை சேர்ந்த 9 பேரை வழிகாட்டிகளாக அழைத்துக் கொண்டனர்.

1953-ம் ஆண்டு எவரஸ்ட் சிகரத்தை அடைந்த எட்மண்ட் ஹில்லாரி, டென்சிங் நார்காய் ஆகியோர் சென்ற வழியில் பெண்கள் குழுவினர் எவரஸ்ட் சிகரத்தை நோக்கி சென்றனர்.

மே மாதம் எவரஸ்ட் சிகரத்தில் 6 ஆயிரத்து 300 மீட்டர் உயரத்தை அடைந்து அந்த பகுதியில் கூடாரம் அமைத்து தங்கியிருந்தனர். அப்போது அந்த பகுதியில் தீடீரென பனிப்பாறைகள் சரிந்தன. எல்லா பெண்களும் பனிப்பாறைக்கு அடியில் புதைந்து போயினர். ஜூன்கோ டாபியும் சுயநினைவை இழந்துவிட்டார். அந்த சமயத்தில் ஒரு வழிகாட்டி ஜூன்கோ டாபி உள்ளிட்ட பெண்களை மீட்டார்.

அதன் பின்னர் 12 நாள் கழித்து ஜூன்கோ டாபி மட்டும் 1975-ம் ஆண்டு இதே நாளில் எவரெஸட் சிகரத்தை அடைந்தார். இதைதொடர்ந்து மேலும் பல சாதனைகளை செய்தார். இப்போது 61 வயதாகும் இவர் வயது காரணமாக மலையேறும் சாதனைகளை குறைத்துக் கொண்டார்.

நிகழ்வுகள்

1811 – கூட்டுப் படைகள் (ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் பிரித்தானியா) பிரெஞ்சுப் படைகளை ஆல்புவேரா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தன.

1916 – யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக வெசாக் பண்டிகை அங்குள்ள சிங்கள மக்களால் கொண்டாடப்பட்டது.

1920 – ரோமில் ஜோன் ஆப் ஆர்க் திருத்தந்தை 15-ம் பெனடிக்ட்டினால் புனிதப்படுத்தப்பட்டார்.

1932 – பம்பாயில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இடம்பெற்ற கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

1960 – கலிபோர்னியாவில் ஹியூஸ் ஆய்வுகூடத்தில் தியொடர் மாய்மன் முதலாவது லேசர் ஒளிக்கதிரை இயக்கினார்.

1966 – சீனாவின் கலாச்சாரப் புரட்சியின் ஆரம்பத்தை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது.

1967 – ஜெருசலேம் நகரம் இஸ்ரேலின் வசம் வந்தது.

1969 – சோவியத்தின் வெனேரா 5 விண்கலம் வீனஸ் கோளில் இறங்கியது.

1975 – பொதுமக்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில் சிக்கிம் இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைக்கப்பட்டது.

1992 – எண்டெவர் விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை முடித்து பூமிக்குத் திரும்பியது.

2006 – தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் கோவில்களில் அர்ச்சகராகத் தகுதி உடையவராக அறிவிக்க மு. கருணாநிதி தலைமையிலான தமிழக அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது.

2006 – நியூசிலாந்திற்கருகில் 7.4 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here