விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் எத்தனையோ சரவணன் கதாபாத்திரம் மாறினாலும், இறுதி வரை ரச்சிதா மட்டுமே மீனாட்சி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த சீரியலில் கிடைத்த புகழால் அவருக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பும் அமைந்தது. தமிழில் ‘உப்பு கருவாடு’, கன்னடத்தில் ‘பாரிஜாதா’ ஆகிய படங்களில் ரிச்சிதா கதாநாயகியாக நடித்துள்ளார்.

சின்னத்திரையில் சாதனை

பெங்களூரில் பிறந்து வளர்ந்த ரச்சிதா, கன்னட சேனலில் ஒளிபரப்பான ’மேக மந்தரன்’ என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தார். அதனைதொடர்ந்து 5 கன்னட சீரியல், 2 தெலுங்கு சீரியல்களில் நடித்து விட்டு, 2011-ல் விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார்.

காதல் திருமணம்

அந்த சீரியலில் தன்னுடன் ஜோடியாக நடித்த ஸ்ரீவில்லிப்புத்தூரை சேர்ந்த தினேஷ் என்பவரை ரச்சிதா காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். பிரிவோம் சந்திப்போம் 2, சரவணன் மீனாட்சி, இளவரசி, மசாலா குடும்பம் உள்ளிட்ட தமிழ் சீரியல்களில் அவர் நடித்தார். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘நாச்சியார்புரம்’ சீரியலில் நடித்து வருகிறார்.

திறமையானவர்

ஜீ தமிழில் ஒளிபரப்பான, ஜூனியர் சீனியர், ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் 3.0 ஆகிய ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஜட்ஜாகவும் இடம்பெற்றிருந்த ரச்சிதா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சரளமாக பேசக் கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here