நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலித்து வரும் நிலையில், தற்போது விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள அன்னையர் தின வாழ்த்து மூலம் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்களா? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதல் ஜோடி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். சில ஆண்டுகளாகவே பரபரப்பான காதல் ஜோடியாக இருக்கும் ஒரே ஜோடி விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் தான். பல வெளிநாடுகளுக்கு சென்று ஜோடியாக சுற்றிய இருவரும், நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தனர்.

வருங்கால தாய்

நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு நயன்தாராவை பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். அதில், “எனது வருங்கால குழந்தைகளில் தாயின் கைகளில் இருக்கும் குழந்தையின் தாய்க்கு அன்னையர் தின வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் திருமணம்?

இந்தப் பதிவின் மூலம் தாங்கள் இருவரும் கணவன் மனைவியாக வாழப் போகிறோம் என்பதை விக்னேஷ் சிவன் சூசகமாக தெரிவித்துள்ளார். விக்னேஷ் சிவனின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதையடுத்து, அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here