கொரோனா ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் வெளியே சுற்றுவதை தடுக்க ஒடிசா மாநில போலீசார் கிராமங்களில் பெண்களை பேய்களாக வேடமணிய வைத்து பயமுறுத்தி வருகின்றனர். போலீசாரின் இந்த நூதன முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

அச்சுறுத்தும் கொரோனா

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்து 939 ஆகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 109 ஆகவும் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

விழிப்புணர்வு

நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய – மாநில அரசுகள் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன. மேலும், காவல்துறையும் மக்களிடம் விழிப்புணர்வை உருவாக்க பல புதுமையான முறைகளைப் பயன்படுத்துகின்றனர்.

‘பேய்’ நடமாட்டம்

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புதியதொரு நூதன முயற்சியை ஒடிசா போலீசார் கையில் எடுத்துள்ளனர். கிராமத்தில் உள்ளவர்கள் தெருக்களில் நடமாடுவதை தடுக்க, ‘பேய்’ வேடமிட்ட நபரை வெளியில் நடமாட வைத்து அவர்கள் பயம் காட்டி வருகின்றனர்.

பீதியில் மக்கள்

கிராம பஞ்சாயத்தை சேர்ந்த பெண் சுண்ணாம்பு, வெள்ளை தோலுடன் பேயாக உடை அணிந்துகொண்டு வீட்டை விட்டு வெளியேறுபவர்களை பின்தொடர செய்து பயமுறுத்துகிறார். அந்த ‘புடவை அணிந்த பெண்’ மக்கள் வீட்டில் தங்குவதை உறுதி செய்வதற்காக இரவு முழுவதும் சுற்றித் திரிகிறார். பேய் பயத்தினால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராததால் போலீசாரின் இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here