தன்னம்பிக்கை மிகுந்த பெண் என்பதால் நயன்தாராவை மிகவும் பிடிக்கும் என இளம் நடிகர் அதர்வா தெரிவித்துள்ளார்.

இளம் நடிகர்

வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் அதர்வாவும் ஒருவர். முரளியின் மகன் என்ற அடையாளத்தை கொண்டுள்ள அதர்வா, வாரிசு நடிகராக இருந்து ஜெயித்துக் கொண்டிருக்கிறார். தனது திரையுலக பயணம் குறித்து பேசிய அதர்வா, வாரிசு நடிகராக இருப்பதிலே சவுகரியங்கள் அதிகம் என்றார்.

அப்பாதான் ‘ஹீரோ’

“அப்பாதான் என் ‘ஹீரோ’. எனக்கு காதல் கதைகளும் பிடிக்கும், விளையாட்டு தொடர்பான கதைகளும் பிடிக்கும். இரண்டும் கலந்த கதை ரொம்ப பிடிக்கும். அப்படி ஒரு கதைதான் ‘ஈட்டி’. எனக்கு மட்டும் இல்லாமல், ரசிகர்களுக்கும் ரொம்ப பிடித்து இருந்தது. போர் சம்பந்தப்பட்ட ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது என கூறினார்.

விஜய்சேதுபதி, நயன்தாரா

வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதால் விஜய் சேதுபதியை மிகவும் பிடிக்கும் என அதர்வா கூறியுள்ளார். அதேபோல், தன்னம்பிக்கை மிகுந்த பெண் என்பதால் நயன்தாராவை பிடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here