இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் சர்ச்சையான கருத்துகளை தெரிவித்த நடிகர் விஜய்சேதுபதி மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகர்

தமிழில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் விஜய்சேதுபதி. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள திரையுலகிலும் ஜொலித்து வருகிறார். இந்த நிலையில், பல மாதங்களுக்கு முன் நடந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் விஜய்சேதுபதி பங்கேற்றார்.

சர்ச்சை பேச்சு

அப்போது, கோவில்களில் கடவுள்களுக்கு நடைபெறும் அபிஷேகம் மற்றும் அலங்கார முறைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. விஜய்சேதுபதியின் பேச்சுக்கு இந்து அமைப்புகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

போலீஸில் புகார்

இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையில் பேசிய நடிகர் விஜய்சேதிபதி மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி அகில இந்திய இந்து மகா சபா சார்பில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகார் மனுவில், இந்து மத ஆகம விதிகளைப் பற்றி புரிந்து கொள்ளாமல் விஜய்சேதுபதி கேலி, விமர்சனம் செய்வதாகவும், தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள இந்து மத சம்பிரதாயங்களை பயன்படுத்திக் கொள்வதாகவும் கூறப்படுள்ளது. எனவே, அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் புகாரில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here