சமூக வலைதளங்களில் உள்ள போலி கணக்குகள் குறித்து புகார் கொடுங்கள் என தனது ரசிகர்களுக்கு நடிகை பாவனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

போலி கணக்குகள்

நடிகர், நடிகைகளின் டுவிட்டர், முகநூல் பக்கங்களை முடக்குவதும், அவர்கள் பெயர்களில் போலியாக கணக்குகளை உருவாக்குவதும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் குஷ்பு, ஷோபனா, அனுபமா பரமேஸ்வரன், சுவாதி உள்ளிட்ட பல நடிகைகள் இதில் சிக்கினர்.

ரசிகர்களுக்கு வேண்டுகோள்

இந்நிலையில், தனது பெயரில் போலி கணக்குகள் உருவாகி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார் நடிகை பாவனா. இதுபற்றி பேசிய அவர், தனது பெயரில் போலி முகநூல் பக்கத்தை உருவாக்கி உள்ளனர். நான் முகநூலில் இணையவில்லை. எனவே ரசிகர்கள் எனது பெயரில் உள்ள போலி கணக்கை பின் தொடர வேண்டாம். இந்த போலி கணக்கு குறித்து புகார் அளியுங்கள் எனக் கூறியுள்ளார். பாவனாவின் வேண்டுகோளை ஏற்று அவரது ரசிகர்களும் புகார் அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

தென்னிந்திய நடிகை

தமிழில் தீபாவளி, சித்திரம் பேசுதடி, ஜெயம் கொண்டான் உள்பட பல படங்களில் பாவனா நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளம், கன்னடப் படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here