தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாக இருக்கும் வடசென்னை 2 படத்தின் முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

வடசென்னை 2

வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் உருவானது வடசென்னை திரைப்படம். 2018-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து, இரண்டாம் பாகம் எடுக்க முடிவு செய்யப்பட்டது.

வெப் தொடர்?

வடசென்னை 2-ம் பாகத்தை 2 சீசன்களை கொண்ட வெப் தொடராக எடுக்கலாமா? என ஆலோசித்து வருவதாக வெற்றிமாறன் கூறியுள்ளார். எனினும் இறுதி முடிவு ஏதும் எடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். வடசென்னை 2 வெப் தொடராக உருவானால் அதில் தனுஷே நடிப்பார் என கூறப்படுகிறது. வெப் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால், பிரபல நடிகர் – நடிகைகள் பலர் அதில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

வெற்றிமாறன் அடுத்த படம்

ஊரடங்கிற்கு முன் சூரி படத்தை இயக்கி வந்த வெற்றிமாறன், அடுத்ததாக சூர்யாவுடன் இணைந்து வாடிவாசல் படத்தை இயக்க உள்ளார். ஹரியுடனான ‘அருவா’ படத்தை சூர்யா முடித்த பிறகு வாடிவாசல் படம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here