அறுவடை செய்ய பணமில்லாமல் தவித்த விவசாயிக்கு நடிகரும், இயக்குனருமான சசிகுமார் பணஉதவி செய்து உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ்

சீனாவின் வூகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக காணப்படும் நிலையில், தமிழகத்திலும் இதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய – மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன.

தவித்த விவசாயி

இந்த நிலையில், மதுரை மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த வாழை விவசாயி ஒருவர், அறுவடை செய்ய வழியின்றி தவித்து வருவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவை பார்த்த ‘கத்துக்குட்டி’ படத்தின் இயக்குனர் இரா.சரவணன், அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

உதவிக்கரம் நீட்டிய சசிகுமார்

இதனை அறிந்த நடிகரும், இயக்குனருமான சசிகுமார், அந்த வாழை விவசாயிக்கு ரூ.25 ஆயிரம் பண உதவி செய்துள்ளார். ஆனால் “சசி சார் உதவியா கொடுத்தாலும் அதை கடனா நினைச்சு, அடுத்த சாகுபடியில் நிச்சயம் அவருக்குத் திருப்பிக் கொடுப்பேன்” என அந்த விவசாயி கூறியுள்ளார்.

பாராட்டு

தனது பதிவை பார்த்து விவசாயிக்கு பண உதவி செய்த சசிகுமாரின் நல்ல மனம் வாழ்க என இயக்குனர் இரா.சரவணன் டுவிட்டரில் வாழ்த்தி உள்ளார். இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார் பெயரிடப்படாத புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here