கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் திரைத்துறையினர் வருவாய் இன்றி தவித்து வருவதை கருத்தில் கொண்டு இயக்குனர் ஹரி ‘அருவா’ படத்துக்கான தனது சம்பளத்தை குறைத்துள்ளார்.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக உலகின் பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து விதமான தொழில்களும் முடங்கியுள்ளதால், வேலை இல்லாமல் தொழிலாளர்களும், முதலாளிகளும் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

முடங்கிய திரைத்துறை

கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் உட்பட திரைத்துறையின் அனைத்துப் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளதால், அதனை சார்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். பல திரைப்படங்கள் தொடங்கியும், முடியும் தருவாயிலும் உள்ள நிலையில், தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளதால் பல தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.

சம்பளம் குறைப்பு

இந்த நிலையில், தயாரிப்பாளர்கள் நலன் கருதி இயக்குநர் ஹரி ‘அருவா’ படத்திற்கான தனது சம்பளத்தில் 25% குறைத்து கொள்வதாக அறிவித்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் நடிகர் சூர்யா நடிக்கும் ‘அருவா’ படத்தை ஹரி இயக்குகிறார். இது சூர்யா மற்றும் ஹரி இணையும் ஆறாவது படமாகும்.

சம்பளத்தை குறைத்த பிரபலங்கள்

நடிகர்கள் விஜய் ஆண்டனி, ஹரிஷ் கல்யாண் ஆகியோர் தற்போது நடிக்கும் மற்றும் நடிக்கப் போகும் படங்களுக்கான சம்பளத்தில் 25% குறைத்துள்ளனர். அதேபோல், இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டனும் தனது சம்பளத்தில் ஒரு பகுதியை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here