கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கெளதம் மேனன் – திரிஷா கூட்டணி குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

டிவிட்டரில் வீடியோ

இதுதொடர்பாக நடிகை திரிஷா தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாங்கள் படமாக்கியுள்ளதை உங்களுக்கு காண்பிக்க ஆவலாக உள்ளேன் எனக் கூறியுள்ளார். எனினும் இவர்கள் ஒரு படத்துக்காக இணைந்துள்ளார்களா? அல்லது குறும்படத்திற்கான கூட்டணியா? எனத் தெரியவில்லை. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் கூட்டணி

கெளதம் மேனன், திரிஷா கூட்டணியில் ‘விண்ணை தாண்டி வருவாயா’, ‘என்னை அறிந்தால்’ ஆகிய படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. தற்போது மீண்டும் இருவரும் கூட்டணி அமைத்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here