சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. சீனாவைப் பொறுத்தமட்டில் அது கட்டுப்படுத்தப்பட்டு, தற்போது இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது. வூகான் நகரில் மக்கள் முன்போலவே வாழத்தொடங்கி விட்டனர்.

மீண்டும் கொரோனா

இந்த நிலையில் அறிகுறிகளே இல்லாமல் அங்கு கொரோனா மீண்டும் பரவத்தொடங்கி இருப்பது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட எந்த அறிகுறிகளும் இல்லாமல் அங்கு 980-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது. அதிலும் ஹூபெய் மாகாணத்தில் மட்டும் 631 பேருக்கு கொரோனா பாதித்து ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு பயண தொடர்பில் இருந்த 115 பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் ஹூபெய் மாகாணத்தில் மட்டுமே கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்த 2 லட்சத்து 82 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டறியப்பட்டு, மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

தீவிர கண்காணிப்பு

இந்த நிலையில் தொழிலாளர் தின கொண்டாட்டங்களுக்காக சீனாவில் நேற்று முதல் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. பயண கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் அங்கு வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதனால் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

கடும் கட்டுப்பாடுகள்

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான பொறுப்பு எல்லா மட்டங்களிலும் இருக்க வேண்டும் என்றும் போக்குவரத்து சாதனங்கள், ஓட்டல்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் எனவும் சீன அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here