‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்கு பிறகு வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிக்கும் ‘வலிமை’ படத்தில் அஜித் நடித்து வருகிறார். சில நாட்கள் நடைபெற்று வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு, கொரோனா ஊரடங்கு காரணமாக தடைபட்டுள்ளது.
‘வலிமை’
மே 1-ந் தேதி அஜித் பிறந்த நாளையொட்டி ‘வலிமை’ படத்தின் முதல் பார்வை வெளியாகும் என அஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், கொரோனாவால் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில், ‘வலிமை’ சம்மந்தமான எந்த ஒரு விளம்பரத்தையும் வெளியிடப் போவதில்லை என படக்குழு அறிவித்துள்ளது.
ரசிகர்கள் ஏமாற்றம்
இதனால் அஜித் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் அஜித் பிறந்தநாளுக்காக டிவிட்டரில் ஹாஷ்டேக்கை உருவாக்கி அதில் சாதனை புரியும் அளவிற்கு டிவீட்டுகளை பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.