தமிழில் வெற்றிவேல், தீரன் அதிகாரம் ஒன்று, சாமி 2, கோமாளி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரவீணா. மலையாள நடிகையான இவர், மலையாளத்தில் இங்கிலீஸ் மீடியம், ஹஸ்பன்ட்ஸ் இன் கோவா, கவுரி, அக்னி சாட்சி உள்பட பல படங்களில் நடித்தார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘மகராசி’ தொடரிலும் நடித்து வருகிறார்.

நல்ல பாம்பு

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள இவரது வீட்டின் கோழிக்கூட்டில் நல்ல பாம்பு ஒன்று திடீரென புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரவீணா, அருகில் உள்ள பாம்பு பண்ணைக்குத் தகவல் கொடுத்தார். பின்னர் அங்கு விரைந்து வந்த ஊழியர்கள், கோழி கூட்டுக்குள் பிறந்து சில நாட்களான நல்லபாம்பு குட்டி ஒன்று இருந்ததை கண்டனர். பின்னர் அதனை லாவமாக பிடித்தனர்.

பிரவீணா கையில் பாம்பு

குட்டியாக இருந்தாலும் பாம்பு படமெடுத்து ஆடியபடி இருந்தது. இதனால் பிரவீணா உட்பட அவர் வீட்டில் இருந்தவர்கள் பயந்தனர். ஆனால், குட்டி பாம்பை கண்டு அஞ்ச வேண்டாம் என நம்பிக்கைக் கொடுத்த ஊழியர்கள், அந்த பாம்பை பிரவீணா கையில் கொடுத்தனர். அதை இரண்டு கைகளிலும் தைரியத்துடன் பெற்றுக்கொண்ட பிரவீணா லேசாக பயந்தார். 

கொல்ல வேண்டாம்

அந்தப் பாம்பு கையில் இருந்தபடி படமெடுத்து ஆடிய வீடியோவை சமூக வலைத்தளத்தில் பிரவீணா பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்து பேசிய பிரவீணா, பாம்பைக் கண்டால் கொல்ல வேண்டும் என்கிற அணுகுமுறை மாற வேண்டும் என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here