நவகிரங்களில், சனீஸ்வர பகவானை பார்த்தாலே பக்தர்கள் பயந்து நடுங்குவர். காரணம், அவரது வலிமையான வீச்சு. அந்த சனீஸ்வர பகவானே சுயம்புவாகத் தோன்றி, கஷ்டப்படும் பக்தர்களை வாரி அரவணைத்து எல்லையில்லாத அருள் வழங்கும் தலம் தான் குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோவில்.

குச்சனூர் சனீஸ்வரர்

தமிழகத்தில் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூரில் சனீஸ்வர பகவான் சுயம்புவாக தோன்றி, தனி கருவறையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். சுயம்பு வடிவ சனீஸ்வரப் பகவானுக்கு குச்சுப்புல்லினால் கோவில் கட்டியதால் குச்சனூர் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவில் இரண்டாயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சுயம்புவாக தோன்றிய பழமையான கோவில்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here