தமிழ் சினிமாவிலும், அரசியலிலும் தனக்கான தனி இடத்தை பிடித்தவர் விஜயகாந்த். கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி மரணமடைந்தார். விஜயகாந்தின் மறைவு தமிழகம் முழுவதும் உள்ள மக்களை பெரிதும் பாதித்ததுடன், அவரது உடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தனர். இந்நிலையில், நடிகர் சங்கம் சார்பில் நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் கூட்டம் சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் பங்கேற்று விஜயகாந்த் குறித்து தங்களது நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். கூட்டத்தில் நடிகர் விஷால் பேசுகையில்; “பல நடிகர்கள் வளர வாய்ப்புக் கொடுத்தவர் விஜயகாந்த். அந்த வகையில் சண்முக பாண்டியனிடம் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். உன்னுடைய படத்தில் எப்போதாவது நானும் சேர்ந்து நடிக்க வேண்டும் என ஆசை இருந்தால் நான் வருகிறேன். என்னை பயன்படுத்திக்கொள்ள உனக்கு விருப்பம் இருந்தால் நானும் உன்னுடன் தூணாக இருந்து படத்தில் நடித்து தருகிறேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here