இந்த மாத இறுதிக்குள் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் முழு செயல்பாட்டுக்கு வரும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

உறுதி

2015 ஆம் ஆண்டு வெள்ளாற்றில் ஏற்பட்ட மணல் குவாரி பிரச்சனை வழக்கு விசாரணைக்காக கடலூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆஜர் ஆனார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த மாத இறுதிக்குள் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் முழு செயல்பாட்டுக்கு வரும் என்றார்.

மக்கள் வரவேற்பு

மேலும் அவர் கூறுகையில்; “இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு 20,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. அரசு பேருந்துகளில் இந்த ஆண்டு 2 லட்சம் பேர் கூடுதலாக பயணம் செய்துள்ளனர். சென்னையில் மட்டும் ஒரு லட்சம் பேர் கூடுதலாக முன்பதிவு செய்தனர். தனியார் பேருந்துகளில் பயணம் செய்யும் மக்கள் அரசுப் பேருந்தை நோக்கி வருகின்றனர். போக்குவரத்து தொழிலாளர்கள் உடன் நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. பேச்சுவார்த்தைக்கு பிறகு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here