சினிமாவில் தொடர்வது எளிதல்ல தினமும் அதற்காக போராட வேண்டும் என நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கருத்து தெரிவித்துள்ளார்.

திறமையான நடிப்பு

மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் நடித்து வருகிறார். விஷால் நடிப்பில் வெளியான ‘ஆக்ஷன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஜகமே தந்திரம்’ என்ற படத்தில் ஈழத் தமிழில் பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்த பூங்குழலி கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றது. அதனைதொடர்ந்து இவர் நடித்த ‘கட்டா குஸ்தி’ திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

எளிதல்ல

இந்த நிலையில் தனது சினிமா வாழ்க்கை குறித்து நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கூறியதாவது; “நான் நடிகை ஆவதற்கு எனது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். எம்பிபிஎஸ் படித்துவிட்டு டாக்டராகப் பயிற்சி எடுக்கும் போதே நடிகையானேன். சினிமா குறித்து எனது பெற்றோருக்கு எதிர்மறையான கருத்து உள்ளது. வெளியில் பார்த்ததையும், கேட்டதையும் வைத்து படம் குறித்து எனக்கு மோசமான கருத்து உள்ளது. நடிப்பை மரியாதைக்குரிய தொழிலாக கருதவில்லை. எனது பார்வையில் சினிமாவில் தொடர்வது எளிதல்ல தினமும் அதற்காக போராட வேண்டும். பெண்களை மட்டுமே பிரதானமாகக் கொண்ட கதைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனெனில் ஆண்களும், பெண்களும் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஒரு படம் என் பார்வையில் சமநிலையில் இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி சினிமா என்பது சமூகத்தையும், நம் வாழ்க்கையையும் பிரதிபலிக்கிறது” என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here