பொறுக்கி மாதிரி இருக்கன்னு சொன்ன நெட்டிசனுக்கு தரமான பதில் கொடுத்துள்ளார் அனிதா சம்பத்.

இணையதளத்தில் பிஸி

செய்தி வாசிப்பாளராக இருந்து பிரபலமானவர் அனிதா சம்பத். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மிகவும் பிரபலமானார். கே.வி. ஆனந்த் இயக்கத்தில் வெளியான காப்பான், ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார் அனிதா சம்பத். தற்போது சோசியல் மீடியாக்களில் பிஸியாக இருந்து வரும் இவர், சொந்த வீடு கடி, ஹோம் டூர் வீடியோவையும் தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு இருந்தார். அடிக்கடி தனது யூடியூப் சேனலில் அழகு குறிப்புகள், அழகு பராமரிப்பு, வீட்டு குறிப்பு என பல வீடியோக்களை பதிவிட்டு வருகிறார் அனிதா சம்பத்.

கூல் ரிப்ளை

அது மட்டும் இல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டு இருந்தார் அனிதா. இதற்கு நெடிசன் ஒருவர் “பக்கா பொறுக்கி மாதிரி இருக்க” என்று படுமோசமான கமெண்ட்டை பதிவிட்டு இருந்தார். இதற்கு சிலர் லைக்கும் கொடுத்து இருந்தனர். இதனை பார்த்த அனிதா சம்பத், “உன்னை யாரோ இப்படி சொல்லி இருப்பாங்க போல, அதை இன்னொருத்தருக்கு சொல்லி ஆறுதல் பட்டுக்குற, உனக்கு லைக் போட்டவனோ எங்கேயும் செம்மையா அடி வாங்கி இருப்பான் போல” என்று செம கூலாக கலாய்த்து சம்பவம் செய்துள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here