ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் “நினைத்தாலே இனிக்கும்” தொடரில் பிக் பாஸ் பிரபலமான தாமரை என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல தொடர்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘நினைத்தாலே இனிக்கும்’ தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. பரபரப்பாக நகரும் இந்த தொடருக்கு பல ரசிகர்கள் உள்ளனர். ‘நினைத்தாலே இனிக்கும்’ தொடரில் ஆனந்த் செல்வன் ஹீரோவாகவும், சுவாதி ஷர்மா ஹீரோயினாகவும் நடித்து வருகின்றனர். ஹீரோயினாக இருக்கக்கூடிய பொம்மி இறந்த பிறகு இந்த சீரியல் எப்படி நகரும் என்று ரசிகர்கள் மத்தியில் குழப்பங்கள் இருந்து வந்த நிலையில், பொம்மி கதாபாத்திரம் ஆவியாக வந்து அனைவரையும் பழிவாங்கும் வகையில் கதை உருவாக்கப்பட்டுள்ளது. விறுவிறுப்பான டுவிஸ்ட்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரின் அடுத்தகட்ட திருப்பம் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலாக காத்துகொண்டு இருக்கின்றனர்.

பிக் பாஸ் பிரபலம்

இந்நிலையில், பிக் பாஸ் மூலம் பிரபலமான தாமரை இந்த சீரியலில் என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடிக்க உள்ளதாகவும், இவரது இந்த புதிய என்ட்ரி சீரியலுக்கு பல மாற்றத்தை கொண்டு வரும் என்றும் கூறுகின்றனர். தாமரை ஏற்கனவே விஜய் டிவியில் “பாரதி கண்ணம்மா 2” சீரியலில் நடித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் சில படங்களிலும் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here