சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விழாவில் “ராக்கெட்டரி” படத்தை இயக்கிய மாதவனுக்கு சிறந்த திரைப்பட இயக்குநருக்கான விருது வழங்கப்பட்டது.

கதைகளுக்கு முக்கியத்துவம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் மாதவன். ஆரம்ப காலத்தில் காதல், ஆக்சன், சென்டிமென்ட் என்று அனைத்து விதமான படங்களிலும் நடித்து வந்த மாதவன், தற்போது கதைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த வகையில் ஜிடி நாயுடுவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வருகிறார்.

சிறந்த இயக்குநர்

அபுதாபியில் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை அன்று சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விழா நடைபெற்றது. இந்த விழாவில் கோலிவுட், பாலிவுட் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் சிறந்த திரைப்படம் மற்றும் நடிகர் நடிகைகள், துணை நடிகர்கள், நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருது வழங்கும் விழாவில் ராக்கெட்டரி படத்தை இயக்கிய மாதவனுக்கு சிறந்த திரைப்பட இயக்குநருக்கான விருது வழங்கப்பட்டது. நடிகராக அனைவரின் மனதிலும் நீங்காத இடத்தை பிடித்துள்ள மாதவன், இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

வாழ்க்கை வரலாற்று கதை

சயின்டிஸ்ட் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ராக்கெட்டரி திரைப்படத்தை இயக்கியிருந்தார் மாதவன். இந்த படத்தில் நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் மாதவன் நடித்திருந்தார். இவருடன் இணைந்து சிம்ரன், ரவி ராகவேந்திரா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ரூ.25 கோடியில் உருவான இந்த திரைப்படம் ரூ.50 கோடி வரை வசூலித்தது. சிறந்த இயக்குநருக்கான விருது மாதவனுக்கு கிடைத்திருப்பது தமிழ் திரையுலகிற்கு கிடைத்த பெரிய அங்கீகாரமாக கருதப்படுகின்றது. இந்த வெற்றிக்காக ரசிகர்கள் மாதவனுக்கு தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here