விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி ஆரம்பமாக இருக்கும் நிலையில் அதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிடித்த நிகழ்ச்சி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கலில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்த நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. சிறந்த பாடகர், பாடகிகளை தேர்ந்தெடுக்கும் இந்த நிகழ்ச்சியின் 9வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. சூப்பர் சிங்கர் சீசன் 9 முடிவடையும் நிலையில் இருப்பதால், அடுத்த கட்டமான சூப்பர் சிங்கர் ஜூனியர் துவங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

புது சீசன் துவக்கம்

இந்த நிகழ்ச்சிக்கான ஆடிஷன்ஸ் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில், கண்டஸ்டன்டுகளை அறிமுகப்படுத்தும் விதமாக ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கை கதையை சொல்லும் வகையில் பாடகர்களை அறிமுகப்படுத்தி, விஜய் டிவி ப்ரோமோக்களை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் வெளியான இந்த ப்ரோமோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதுவரை 8 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், தற்போது 9வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது. இந்த ப்ரோமோவில் அறிமுகமாகும் குழந்தைகளுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here