40 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாததற்கு காரணம் கூறியுள்ளார் சின்னத்திரை நடிகை ஸ்ருதி ராஜ்.

சின்னத்திரை பிரபலம்

சின்னத்திரையில் தற்போது பிரபலமாக இருக்கக்கூடியவர் நடிகை ஸ்ருதி ராஜ். தமிழில் குறிப்பிட்ட சில படங்களில் நடித்துள்ள ஸ்ருதி, தென்றல், திருமதி செல்வம் உள்ளிட்ட தொடர்களின் மூலம் மிகவும் பிரபலமானார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “தாலாட்டு” தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய நடிகை ஸ்ருதி ராஜ், ரீல்ஸ் வீடியோக்களையும், போட்டோஷூட் புகைப்படங்களையும் அடிக்கடி வெளியிட்டு வருவார்.

கூல் பதில்

40 வயதாகும் நடிகை ஸ்ருதி ராஜ் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இதனால் திருமணம் குறித்து அடிக்கடி சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கேள்வி கேட்டு வருவார்கள். இந்நிலையில் சமீபத்தில் இந்த கேள்விகளுக்கு நடிகை ஸ்ருதி பதில் அளித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது; “எந்த விஷயத்தையும் திட்டமிட்டு செய்வது கிடையாது. அப்படி திட்டமிட்டு செய்தாலும் அது சரி வராது. அதனால் என்னுடைய திருமணம் குறித்து நான் யோசிக்கவில்லை. அது என்னுடைய பெற்றோர் பார்த்துக் கொள்வார்கள்” என அவர் கூலாக பதில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here