டெர்மினேட்டர் படங்களில் இருந்து விலகியதாக நடிகர் அர்னால்டு தெரிவித்துள்ளார்.

வெற்றி படங்கள்

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வெளியான டெர்மினேட்டர் திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து டெர்மினேட்டர் 2, 1991 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. இந்த வரிசையில் டெர்மினேட்டர் 3, 2003 ஆம் ஆண்டு வெளியானது. இந்தத் திரைப்படமும் வசூலில் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதனை தொடர்ந்து அடுத்த கட்டமாக வெளியான திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

விலகிய நடிகர்கள்

சமீப காலமாக டெர்மினேட்டர் வரிசை படங்கள் சரியான வரவேற்பை பெறாததால், அப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக டெர்மினேட்டர் நாயகன் நடிகர் அர்னால்டு கூறியுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள பதிவில், “என் வெற்றிக்கு டெர்மினேட்டர் மிகப்பெரிய காரணம். முதல் மூன்று வரிசை படங்கள் சிறப்பாக அமைந்தன. நான்காவது படத்தில் நான் நடிக்கவில்லை. ஐந்து மற்றும் ஆறாவது படங்களும் சரியான வரவேற்பை பெறவில்லை.” இதனால் இந்த படங்களில் இருந்து விலகிவிட்டதாக கூறியுள்ளார். இவர் மட்டும் இல்லாமல் இந்த படங்களில் சாரா கானர் கதாபாத்திரத்தில் நடித்த லிண்டா ஹாமில்டனும், இனி வரும் டெர்மினேட்டர் படங்களில் நடிக்க மாட்டேன் என்று ஏற்கெனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here