இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்துள்ளது.

முதல்முறை

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியது. அதாவது நேற்று பாதிப்பு 7 ஆயிரத்து 830 பேருக்கு பாதித்தது. இது 7 மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக அதிகபட்ச பாதிப்பு எனக் கூறப்படுகிறது.

அதிகரிப்பு

இந்த நிலையில், இன்று மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஒருநாள் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டி அதிரவைத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 10,158 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிற்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 44,998 ஆக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here