இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கெட்அப் ரவுண்ட் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

விஜெ விஷால் எலிமினேட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி, ஒரு சமையல் நிகழ்ச்சி ஆக மட்டும் இல்லாமல் காமெடி ஷோவை போல் இருப்பதால் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் படியாக உள்ளதால் அனைத்து வயதினரும் இந்த நிகழ்ச்சியை கண்டு ரசித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் இருந்து வாரம் தோறும் ஒருவர் எலிமினேட் செய்யப்படுவார். அந்த வகையில் இந்த வாரம் விஜெ விஷால் எலிமினேட் செய்யப்பட்டார்.

வேற லெவல் ஆட்டம்

இந்த வாரம் ஒவ்வொரு கோமாளியும் ஒவ்வொரு போட்டியாளர் போன்ற கெட்டப்பில் களம் இறங்கினர். அந்த வகையில் ஷெரின் போல புகழும், ஷ்ருஷ்டியைப் போல குரேஷியும் கெட்அப் போட்டு அசத்தினர். கெட்டப் மட்டும் இல்லாமல் அவர்களைப் போலவே நடை உடை பாவனை என அனைத்தையும் செம காமெடியாக செய்து காட்டினார். கடந்த வாரத்தின் ப்ரோமோ வெளியான நாள் முதல் எபிசோடுக்காக காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு, இந்த நிகழ்ச்சி செம என்டர்டைன்மென்ட் ஆகவே அமைந்தது. அதுமட்டும் இல்லாமல் புகழ் மற்றும் குரேஷியின் வித்தியாசமான கெட்டப் மாறிய புகைப்படங்களும், வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here