ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அமுதாவும் அன்னலட்சுமியும் தொடரில் தற்போது பல்வேறு திருப்பங்களுடன் கதை நகர்கிறது.

கிளம்பும் செல்வா

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபல தொடரான அமுதாவும் அன்னலட்சுமியும் தொடர் தற்போது பல்வேறு திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கின்றது. விறுவிறுப்பாக நகரும் இந்த தொடரில் இன்றைய எபிசோடில் புவனா தாலி பிரித்து கோர்க்க அம்மா வீட்டிற்கு கிளம்ப வேண்டும் என்று சொல்கிறார். உமாவும் அண்ணியும் அவரை திட்ட, செல்வா அவர்கள் அனைவரையும் எதிர்த்து பேசிவிட்டு புவனாவை அழைத்துச் செல்கிறார்.

தட்டி தூக்கும் லாரி

அதன்பிறகு உமா பழனியிடம், நம்ம விஷயத்துல யாராச்சும் குறுக்க வந்தா அவங்க அண்ணனா இருந்தாலும் சரி தம்பியா ஆனாலும் சரி விடக்கூடாது அவ போற வண்டிய ஒரு தட்டு தட்டுங்க என சொல்கிறார். செல்வாவும், புவனாவும் செல்லும் காரை ஒரு லாரி ஃபாலோ செய்து வருகின்றது. இதைத்தொடர்ந்து அமுதா தாலியை வைத்து சாமி கும்பிடும்போது செந்திலின் அப்பா ஆவியாக வந்து அமுதாவிடம் நீதான் இந்த குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்றும் சொல்கிறார். மேலும் புவனாவின் உயிருக்கு ஆபத்து என்றும் சொல்கிறார். அடுத்து புவனா போகும் காரை லாரி தட்டி தூக்குகிறது. இந்நிலையில் வீட்டில் அமுதாவும் மற்றவர்களும் காத்திருக்க உமா அண்ணத்திற்கு போன் செய்து புவனா செல்வா வந்த கார் ஆக்சிடென்ட் ஆகிவிட்டது என சொல்ல அன்னம் ஷாக் ஆகிறார். இப்படி வில்லத்தனத்துடன் செல்லும் இந்த தொடர் 200 எபிசோடுகளை தாண்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. அடுத்தது செல்வா மற்றும் புவனாவிற்கு என்ன ஆயிற்று என்பதை விறுவிறுப்புடன் நகர்கிறது கதை. இந்த எபிசோடை பார்த்து ரசிகர்கள் மிகவும் திரில்லாக இருந்ததாக கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here