குன்னூர் ரன்னிமேடு ரயில் நிலையத்தில் காட்டு யானைகள் முகாமிட்டதால் பொதுமக்கள் பீதியடையந்தனர்.

யானைகள் உலா

நீலகிரி மாவட்டத்தின் சமவெளி பகுதிகளில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக  உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளை நோக்கி படையெடுக்கின்றன. அந்த வகையில் தற்போது காட்டு யானைகள் குன்னூர் நகர் நோக்கி படையெடுத்துள்ளன. குன்னூர் மலைப்பாதையில் கடந்த 5 நாட்களாக குட்டி உட்பட 3 காட்டு யானைகள் உலா வருகின்றன.

ஓட்டம் பிடித்த மக்கள்

மலைபாதையில் சுற்றித்திரிந்த யானைகளை வனத்துறையினர் பல கிலோ மீட்டர் தூரம் துரத்தி வனப்பகுதியில் விரட்டிவிட்ட நிலையில், மீண்டும் ரன்னிமேடு நிலையத்திற்குள் வந்தது. காட்டுயானைகள் ஆக்ரோசமாக காணப்பட்டதை கண்ட அப்பகுதி மக்கள், ஓட்டம் பிடித்தனர். பின்னர் வனத்துறையினர் காட்டு யானைகளை ரயில்பாதைக்கு விரட்டினர். மீண்டும் ரயில் நிலையத்திற்கு காட்டு யானை வரும் என்பதால் வனத்துறையினர் அங்கு கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here