பத்து தல படத்தில் இடம்பெற்றுள்ள ஐட்டம் சாங்கில் நடிகை சாயிஷா செம குத்தாட்டம் போட்டுள்ள பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்பு

சிலம்பரசன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் திரைப்படம் பத்து தல. சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் சூப்பர்ஹிட் படமாக அமைந்ததால், அதன்பிறகு இவருக்கு பல பட வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைத்தது. அந்த வகையில், சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் அந்த படத்தில் இடம் பெற்றிருந்த அனைத்து பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சிம்பு மட்டும் இல்லாமல் சிம்பு ரசிகர்களும் அவரது வெற்றியை கொண்டாடி வந்த நிலையில், பத்து தல படத்திற்காக நீண்ட நாட்களாக அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர். சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா பத்து தல படத்தையும் இயக்கியுள்ளார். கன்னட படமான முஃப்தி படத்தின் ரீமேக் தான் இந்த பத்து தல திரைப்படம். கன்னடத்தில் இந்த படம் சூப்பர்ஹிட் படமாக அமைந்தது. தமிழிலும் அதே அளவு வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

குத்தாட்டம் போட்ட சாயிஷா

2019 ஆம் ஆண்டு நடிகை சாயிஷாவும் ஆர்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு அழகான பெண் குழந்தை உள்ளது. தமிழில் டெடி படத்திற்கு பிறகு கன்னடத்தில் யுவராத்னா என்ற படத்தில் நடித்திருந்தார் சாயிஷா. அதன்பிறகு முற்றிலுமாக குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்த நடிகை சாயிஷா, குழந்தை பிறப்புக்கு பிறகும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். நடனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட சாயிஷா அடிக்கடி நடனமாடிய வீடியோக்களையும் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருவார். தனக்கேற்ற கம்பேக்கிற்காக காத்துக் கொண்டிருந்த நடிகை சாயிஷா, பத்து தல படத்தில் ஐட்டம் சாங் ஒன்றுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார். கவர்ச்சியாக இவர் நடனமாடி இருக்கும் இந்த பாடல் இன்று 5 மணிக்கு வெளியாக உள்ளது. இதற்கான போஸ்டருடன் பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதில் கவர்ச்சியாக நடனமாடும் சாயிஷாவின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் சமந்தாவின் ஓ சொல்றியா மாமா பாடலை இப்பாடல் கண்டிப்பாக மிஞ்சும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here