ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஹார்திக் பாண்டியா அபாரமாக பந்துவீசி எதிரணியை திணறடித்துள்ளார்.

தொடர் சமம்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பாா்டா் – காவஸ்கா் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. அடுத்ததாக, இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதன்படி, மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து விசாகப்பட்டினத்தில் நடந்த 2வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற சமனில் உள்ளது.

தீர்மானிக்கும் ஆட்டம்

இந்த நிலையில், தொடரை தீர்மானிக்கும் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் பகல் -இரவு ஆட்டமாக நடந்து வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை செய்வதது. டிராவிஸ் ஹெட் – மிட்செல் மார்ஷ் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி முதல் பவர் பிளே முழுதும் நிலைத்து நின்று ஆடியது. இதனால் விக்கெட் வீழ்த்த இந்திய வீரர்கள் போராடினார். அந்த தருணத்தில் ஹர்திக் பாண்டியா வீசிய பந்தை டிராவிஸ் ஹெட், குல்தீப் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 4 பவுண்டரி 2 சிக்ஸர்களை பறக்கவிட்ட அவர் 33 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மிரட்டும் பந்துவீச்சு

பின்னர் வந்த கேப்டன் ஸ்மித், ஹர்திக் வீசிய பந்தில் டக்-அவுட் ஆகி வெளியேறினார். அரைசதம் விளாசுவார் என்று எதிர்பாக்கப்பட்ட மிட்சல் மார்ஷ் 47 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு டேவிட் வார்னர் களத்தில் இருந்த மார்னஸ் லாபுசாக்னே உடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுமை கலந்த அதிரடியை வெளிப்படுத்தி வந்தது. எனினும், குல்தீப் விரித்த சுழல் வலையில் சிக்கிய வார்னர் 23 ரன்னில் அவுட் ஆனார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here