விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகளில் குக் வித் கோமாளியும் ஒன்று. கடந்த 3 சீசன்களாக ரசிகர்களின் பேராதரவை பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சி, வெற்றிகரமாக 4வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த நிலையில் கடந்த 3 சீசன்களிலும் கலக்கிய மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவரது பதிவு ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. அதனைதொடர்ந்து தற்போது மற்றொரு காமெடி நட்சத்திரமான குரேஷியும் விலகுவதாக செய்திகள் வெளியானது. இது உண்மைதானா என ரசிகர்கள் தவித்து வந்த வேளையில், குரேஷியும் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘குக் வித் கோமாளி நிகழ்ச்சி கொடுத்த நினைவுகளுக்கு நன்றி’ என சொல்லி, நிகழ்ச்சியிலிருந்து விலகுவதை சூசகமாக சொல்வது போல் டுவீட் போட்டிருந்தார். இதனால், அவர் உண்மையிலேயே விலகிவிட்டார் என சோஷியல் மீடியாவில் தகவல்கள் பரவ ஆரம்பித்தன. இதனையடுத்து அந்த டுவீட்டை குரேஷி தற்போது நீக்கிவிட்டு, ‘உடல் மண்ணுக்கு உயிர் குக் வித் கோமாளிக்கு’ என புதிதாக டுவீட் போட்டுள்ளார். குரேஷியின் உண்மையிலேயே நிகழ்ச்சியிலிருந்து விலகிவிட்டாரா? இல்லையா என்பது புரியாமல் ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here