சமீபத்தில் நடைபெற்ற கப்ஸா பட பத்திரிகையாளர் சந்திப்பின் போது நடிகர் ரஜினிகாந்தை புகழ்ந்து தள்ளியுள்ளார் நடிகை ஸ்ரேயா.

விரைவில் ரிலீஸ்

எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. தனது முதல் படத்திலேயே கவர்ச்சிக்கு குறைவில்லாமல் நடித்து, ரசிகர்களின் கவனத்தை திசை திருப்பினார். தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்த ஸ்ரேயா, மழை படத்தின் மூலம் ஹீரோயின் ஆக பிரபலமானார். இந்த படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்திருந்தார். அதன்பிறகு திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். ரஜினி, விக்ரம், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தமிழில் கிட்டத்தட்ட 20 வருடங்களாக முன்னணி நடிகையாகவே இருந்து வருகிறார். தற்போது இவரது நடிப்பில் கப்ஸா திரைப்படம் வெளிவர தயாராக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்ததை தொடர்ந்து, படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றது. வருகின்ற 17ஆம் தேதி கப்ஸா திரைப்படம் வெளிவரவுள்ளது.

கற்றுக் கொண்டேன்

கப்ஸா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய நடிகை ஸ்ரேயா நடிகர் ரஜினிகாந்த் குறித்து பல தகவல்களை கூறினார். நடிகை ஸ்ரேயா பேசுகையில்; ரஜினிகாந்த்தான் என்றும் சூப்பர் ஸ்டார். ரஜினியுடன் நடித்தபோது நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். அவருடன் மீண்டும் நடிக்க விரும்புகிறேன். ஒருவருக்கு எப்படி மரியாதை கொடுக்க வேண்டும், இரக்கம் காட்டுவது, எப்படி வெற்றி தலைக்கு மேல் உயர்த்திக் கூடாது போன்ற பல விஷயங்களை, அவரை பார்த்து நான் கற்றுக்கொண்டேன். சிவாஜி படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநர் ஷங்கருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு ஸ்ரேயா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here