பெண்களுக்கு உடல் ரீதியிலான துன்புறுத்தல்கள் மட்டுமல்லாமல் வாய் மொழி சித்திரவதை மற்றும் தொந்தரவு கொடுப்பதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான “உங்களில் யார் அடுத்த பிரபுதேவா” என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தார். தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வரும் நடிகை சாய் பல்லவி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் இவர் நடித்த சில படங்கள் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் இவரது ரவுடி பேபி பாடல் இன்றும் யூடியூப் டிரெண்டாகவே இருந்து வருகிறது.

நேச்சுரல் பியூட்டி

நேச்சுரல் பியூட்டி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை சாய் பல்லவி ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்திலேயே நடித்து வருகிறார். அதுவும் கவர்ச்சி இல்லாத கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். நடிகை சாய் பல்லவி நடிப்பில் சமீபத்தில் வெளியான கார்கி திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார். இப்படி பிசியாக இருந்து வரும் சாய் பல்லவி சமீபத்தில் விஜய் மற்றும் அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் வேண்டாம் என்று கூறியதாக தகவல் வெளியானது. விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான வாரிசு திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க முதலில் சாய்பல்லவியை அணுகியதாகவும், அவர் ஹீரோயின் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லாததால் மறுத்ததாகவும் தகவல்கள் வெளியானது.

மீ டூ சர்ச்சை

சினிமாத்துறையில் கடந்த சில ஆண்டுகளாக அதிகம் பேசப்படும் சர்ச்சைகளில் ஒன்று மீ டூ. நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் பற்றி வெளிப்படையாக பேசும் விஷயங்கள் மீ டூவில் சேரும். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை சாய் பல்லவியிடம் மீடூ பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு சாய் பல்லவி கூறியிருப்பதாவது; “பெண்களுக்கு உடல் ரீதியிலான துன்புறுத்தல்கள் மட்டுமல்லாமல் வாய் மொழி சித்திரவதை மற்றும் தொந்தரவு கொடுப்பதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. பெண்களை வாய் மொழியாக திட்டுவது அவர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும் துஷ்பிரயோகம் ஆகும். அதுவும் மீ டூவில் தான் வரும்” என்று அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here