மார்ச் 12ஆம் தேதி நடைபெற உள்ள ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் “நாட்டு நாட்டு” பாடல் மேடையில் பாடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆஸ்கருக்கு பரிந்துரை

எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் RRR. இப்படத்தில் இடம் பெற்ற நாட்டு கூத்து பாடல், சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவுக்கு வெளியே ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்திய திரைப்பட பாடல் என்ற வரலாற்றைப் படைத்துள்ளது. லாஸ் ஏஞ்சலஸில் நடைபெற்று வரும் 95வது அகாடமி விருதுகளில், சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளிவந்த பிளாக்பஸ்டர் படமான RRR பாடல் பரிந்துரைக்கப்பட்டது. இந்த திரைப்படம் ரூ.1200 கோடிகளுக்கும் மேல் வசூலித்ததுடன், தொடர்ந்து சர்வதேச விருதுகளை வென்று அசத்தி வருகிறது.

இறுதி பட்டியல்

ஏற்கனவே கிரிடிக்ஸ் சாய்ஸ் அவார்ட்ஸ் விழாவில் இரண்டு பிரிவுகளில் விருதுகளை வென்றிருந்தது RRR திரைப்படம். சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம் மற்றும் சிறந்த பாடல் என இரண்டு விருதுகளை வென்றது. அதேபோல் நாட்டு நாட்டு பாடலுக்கான கோல்டன் குளோப் விருதையும் கீரவாணி பெற்றார். அடுத்தடுத்து பல விருதுகளை குவித்து வரும் RRR திரைப்படம், ஆஸ்கர் விருதையும் வெல்லும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்காவில் மார்ச் 12ஆம் தேதி நடைபெற உள்ள ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் “நாட்டு நாட்டு” பாடல் மேடையில் பாடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆஸ்கர் விருது விழாவின் இறுதி நாமினேஷன் பட்டியலிலும் “நாட்டு நாட்டு” பாடல் இடம்பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்கார் விருது கிடைக்கும் வாய்ப்பு இந்த பாடலுக்கு அதிகம் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருவதுடன், வாழ்த்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here