சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படத்தில் நடிக்க இருக்கும் நடிகைகளின் லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது.

3 பாகங்கள்

காஃபி வித் காதல் படத்தை தொடர்ந்து இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்த படத்தில் சுந்தர்.சி ஹீரோவாக நடிப்பதாகவும் தற்போது முடிவாகியுள்ளது. இது மட்டும் இல்லாமல் அரண்மனை 4-ல் நடிக்கக்கூடிய ஹீரோயின்கள் குறித்த தகவல்களும் வெளிவந்துள்ளது. கடந்த சில வருடங்களாக ஹிந்தியில் பிஸியாக இருந்து வரும் நடிகை தமன்னா, அரண்மனை 4 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஜெயிலர் படத்தில் நடித்து வரும் நடிகை தமன்னா, அந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு அரண்மனை 4 படத்தில் நடிக்க உள்ளதாக கூறுகின்றனர். இந்த கதைக்கு இரண்டு கதாநாயகிகள் தேவை என்பதால் அடுத்த ஹீரோயினை தேடிக் கொண்டிருந்த சுந்தர் சி, நடிகை ராஷி கண்ணாவை இரண்டாவது கதாநாயகியாக நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்து உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

மறுத்த விஜய் சேதுபதி

ஏற்கனவே அரண்மனை 4 படத்தின் ஹீரோவாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடந்ததாகவும், சம்பள விவகாரம் காரணமாகவும், கால்ஷீட் காரணமாகவும் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்கவில்லை என்று தகவல் வெளியானது. அது மட்டும் இல்லாமல் காமெடி கேரக்டருக்காக நடிகர் சந்தானத்தை அணுகியதாகவும் கூறினர். ஆனால் தற்போது சுந்தர்.சி ஹீரோவாக நடிக்கப் போவதாகவும் முடிவாகிவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here