பாலிவுட்டில் முன்னணி கவர்ச்சி நடிகையான சன்னி லியோன், துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய முன் வந்துள்ளார்.

தமிழில் பல படங்கள்

பாலிவுட்டின் கவர்ச்சி நடிகைகளில் ஒருவரான நடிகை சன்னி லியோன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஓ மை கோஸ்ட். சதீஷ், ரமேஷ் திலக், யோகி பாபு போன்ற பலரும் நடித்திருந்த இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஹிந்தியில் மட்டுமல்லாமல் கன்னடம், மராத்தி, தெலுங்கு போன்ற பல மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழ் மற்றும் ஹிந்தியில் பல படங்கள் தன் கைவசம் வைத்துள்ளார் நடிகை சன்னி லியோன். இவர் தற்போது துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார்.

உதவும் சன்னி லியோன்

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பல நாடுகளில் இருந்து உதவிகள் செய்து வரும் நிலையில், நடிகை சன்னி லியோனும் அவர் கணவர் டேனியல் வெபரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன் வந்துள்ளனர். அதாவது அவர்களுடைய ஒப்பனை பிராண்டின் பிப்ரவரி மாதம் வருவாயில் 10 சதவீதத்தை நிவாரணத்திற்கு வழங்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து சன்னி லியோன் கூறும்போது, “உலகம் முழுவதும் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து தேவைப்படுபவர்களுக்குக் கைகொடுக்க வேண்டியது இப்போது அவசியம். நிலநடுக்கத்தில் இருந்து தப்பியவர்கள், தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப, எங்களுடன் இணைந்து உதவக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here