டைட்டானிக் படத்தின் வசூல் சாதனையை பின்னுக்கு தள்ளி அவதார் 2 சாதனை படைத்துள்ளது.

ஹாலிவுட் ஆர்வம்

ஹாலிவுட் படங்களை பார்ப்பதற்கு அனைவருக்கும் ஒரு தனி ஆர்வம் இருக்கத்தான் செய்யும். பல ஹாலிவுட் படங்கள் அந்த லிஸ்டில் வெற்றி பெற்றுள்ளது. அந்த வரிசையில் தான் தற்போது அவதார் 2 படமும் சேர்ந்துள்ளது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த டிசம்பர் மாதம் 16ஆம் தேதி வெளியான அவதார் 2 திரைப்படம், தற்போது வசூல்வேட்டை நடத்தி வருகிறது. அவதார்: த வே ஆஃப் வாட்டர் படத்தில் சாம் வொர்த்திங்டன், ஜோ சல்டனா, ஸ்டீபன் லாங், கேத் வின்ஸ்லெட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

வசூல் வேட்டை

கேமரூன் இயக்கத்தில் வெளியான டைட்டானிக் படத்தின் வசூலை அவதார் 2 திரைப்படம் முறியடித்துள்ளது. ரூ. 18,530 கோடி வசூலித்து டைட்டானிக் படம் மூன்றாவது இடத்தில் இருந்தது. இந்த சாதனையை முறியடித்து தற்போது அவதார் ரூ.18,534 கோடிக்கு மேல் வசூலித்து டைட்டானிக் படத்தின் சாதனையை முந்தியுள்ளது. இதனால் டைட்டானிக் திரைப்படம் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. உலக அளவில் அதிக வசூலித்த படங்களில் அவதார் முதல் பாகம்.ரூ. 23,968 கோடியுடன் முதல் இடத்தில் உள்ளது. அவெஞ்சர்ஸ் எண்டு கேம் 22,319 கோடி வசூலித்து இரண்டாம் இடத்திலும் உள்ளது. தற்போது அவதார் 2 மூன்றாம் இடத்திலும், டைட்டானிக் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது. அவதார் 2 திரைப்படம் பல கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலில் முந்தி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here