கூகுள் இந்தியா நிறுவனம் இரவோடு இரவாக நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பது அவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

நீக்கம்

சர்வதேச பொருளாதார நெருக்கடியின் காரணமாக உலக முழுவதும் மிகவும் செல்வாக்கு மிக்க நிறுவனங்கள் கூட, தங்களது நிறுவனத்தில் பணியாற்றும் மொத்த பணியாளர்களில் 10 சதவீதம் அளவிற்கு வெளியேற்றி வருகின்றன. அந்த வகையில் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனம், தங்களிடம் பணியாற்றும் மொத்த ஊழியர்களில் 12,000 பேரை பணிநீக்கம் செய்யப்போவதாக கடந்த மாதம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் தான் கூகுள் நிறுவனத்தின் இந்திய கிளையில் பணியாற்றி வந்த ஊழியர்களில் 453 பேரை பணியில் இருந்து நீக்கி உள்ளது.

மனவேதனை

நேற்று இரவு 453 கூகுள் இந்திய ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும், பணிநீக்கம் செய்யப்பட்ட அனைவருக்கும் இமெயில் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. நேற்று வரை கூகுள் நிறுவனத்தின் ஊழியர்களாக இருந்தவர்கள், இன்று காலை விரட்டி அடிக்கப்பட்டதை அறிந்து பெரும் மனவேதனை அடைந்துள்ளனர். இதனிடையே கூகுள் நிறுவனத்தின் பணிநீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுவிட்சர்லாந்தில் உள்ள கூகுள் ஊழியர்கள் வெளிநடப்பு செய்தனர். சுமார் 250 ஊழியர்கள் கூகுள் அலுவலகத்திற்கு வெளியே நின்று பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here