நடிகை பூர்ணா தனது கர்ப்பகால போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

தலைவி படத்தில் பூர்ணா

இயக்குநர் திருமுருகன் இயக்கத்தில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை பூர்ணா. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு கொடைக்கானல், கந்தகோட்டை, துரோகி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த தமிழ் படங்கள் எதுவும் கைகொடுக்காத நிலையில், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் நடித்து தன்னை நிலை நிறுத்திக்கொண்டார் நடிகை பூர்ணா. 2021ஆம் ஆண்டு இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான தலைவி படத்தில் நடித்திருந்தார்.

அழகிய புகைப்படங்கள்

சமீபத்தில் துபாய் தொழிலதிபர் ஷனித் அசிப் அலியை காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகை பூர்ணா, சில தினங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை சமூக வலைத்தளத்தின் மூலம் வெளிப்படுத்தினார். தற்போது வளைகாப்பு முடிந்து, போட்டோஷூட் செய்த புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதற்கு கேப்ஷனாக, “வாழ்க்கையின் மிகப்பெரிய அதிசயம் உங்களுக்குள் உயிர் வளர்வது தான்” என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது லைக்குகளையும், ஹார்ட்டின்களையும் பெற்று வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here